×

சிறுவனை கடத்தி கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் சென்னை வாலிபர் வெட்டிக்கொலை: திருவண்ணாமலையில் 5 பேர் கும்பல் வெறி

சென்னை: சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவரது மனைவி மஞ்சுளா. அண்ணா சாலை மின்வாரிய அலுவலக ஊழியர். இவர்களது மகன் ரித்தேஷ் சாய் (10). அதே பகுதி  தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்தான்.ரித்தேஷ் சாய் தினமும் பள்ளி முடிந்து இந்தி டியூ‌ஷனுக்கு செல்வது வழக்கம். கார்த்திகேயன் டியூசனுக்கு விட்டுவிட்டு மீண்டும் இரவில் வீட்டுக்கு அழைத்து வருவார். கடந்த மார்ச் மாதம் டியூஷனுக்கு சென்ற ரித்தேஷ் சாயை  கார்த்திகேயன் அழைத்து வர சென்றபோது நாகராஜ் என்பவர் அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கார்த்திகேயன் எம்ஜிஆர் நகர் போலீசில் நாகராஜின் போன் நம்பரை கொடுத்து புகாரளித்தார். கடத்தப்பட்ட சிறுவனை மீட்க, நாகராஜின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். மறுநாள்  அதிகாலை வேலூர் பஸ் நிலையத்தில் நாகராஜ் நிற்பது செல்போன் டவர் மூலம் தெரிந்தது. அவரை பிடித்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் சிறுவன் ரித்தேஷ் சாயை இரவு 8 மணிக்கே அடித்து கொன்றுவிட்டதாக தெரிவித்தான். சடலம் சேலையூரிலுள்ள ஒரு வீட்டில் கிடப்பதாகவும் கூறினான். போலீசார் சேலையூர் விரைந்து கொலை செய்யப்பட்டு  கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர். விசாரணையில் நாகராஜுக்கும், சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் இடையே கள்ளக்காதல் தகராறில் சிறுவனை நாகராஜ் கொலை செய்தது தெரிந்தது.இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துகொண்டு, திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தலைமறைவாக  இருந்தார்.இந்நிலையில் திருவண்ணாமலை ஐயங்குள தெருவில் செல்போன் கடையில் நேற்று மாலை ஒரு வாலிபர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். பின்னர்  வீச்சரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த வாலிபர் அதே இடத்தில் இறந்தார்.இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான வாலிபர் சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஏழுமலை மகன் நாகராஜ் (25) என தெரிந்தது.இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை  தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Vettikkalai ,Thiruvannamalai , bail,kidnapping , boy Chennai youth ,wicketkeeper,Thiruvannamalai
× RELATED சப்- இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார்...